/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 08, 2025 01:09 AM

கள்ளக்குறிச்சி : ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், கோரிக்கை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொருளாளர் கிஷ்ணசாமி, மகளிர் அணி தலைவர் அமலா, தன்ராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் பெருமாள் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
டி.என்.டி.எஸ்.சி., எடை தராசும் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனையத்தை இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கவுரவ தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் முருகன், ரவி, துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட ரேஷன் கடை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.