/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இரண்டு ஆசிரியர்கள் கைது
/
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இரண்டு ஆசிரியர்கள் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இரண்டு ஆசிரியர்கள் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இரண்டு ஆசிரியர்கள் கைது
ADDED : ஆக 02, 2025 02:29 AM
கள்ளக்குறிச்சி:அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர்.
இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், தலைமை ஆசிரியர் தனபால் ஏற்கனவே 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுதவிர, ஆசிரியர்கள் சிலர் மீதும் பாலியல் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் மீது போக்சோ பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தொடர் விசாரணையில், ஆசிரியர் வாணியந்தலை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜவேல், 53; பகுதி நேர ஆசிரியர் கெடாரை சேர்ந்த ராமசாமி மகன் தேவேந்திரன், 40; ஆகிய இருவரும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிந்தது.
இதையடுத்து, தேவேந்திரன், ராஜவேல் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியர் தனபாலை தேடி வருகின்றனர்.