/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அரியலுாரில் கலெக்டர் ஆய்வு
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அரியலுாரில் கலெக்டர் ஆய்வு
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அரியலுாரில் கலெக்டர் ஆய்வு
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அரியலுாரில் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 07, 2025 05:33 AM

ரிஷிவந்தியம்: அரியலுாரில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாணாபுரம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது.
பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, சித்த மருத்துவம் உட்பட 17 வகையான சிறப்பு நிபுணர்களை கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்தம், இ.சி.ஜி., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு எக்கோ கார்டியோகிராம், எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பபை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
மருத்துவ முகாமை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் வசந்தகுமாரி லிங்கநாதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், சுகாதார துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.