ADDED : செப் 07, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி சிறப்பு வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணி முதல் திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், மீனாட்சி சொக்கநாதர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தது. திருநாவுக்கரசு திருமட சிவனடியார்களால் நடத்தப்பட்டது.