/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூதாட்டியிடம் செயின் திருட்டு
/
மூதாட்டியிடம் செயின் திருட்டு
ADDED : செப் 07, 2025 05:33 AM
கள்ளக்குறிச்சி: தச்சூரில் மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி, 70; இவர் கடந்த 4ம் தேதி தச்சூரில் நடந்த சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.
விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, காமாட்சி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின் திருடுபோனது.
இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி பல்வேறு இடங்களில் தேடியும் செயின் கிடைக்கவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் காமாட்சி புகார் அளித்தார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, செயின் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.