/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
/
சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
ADDED : செப் 07, 2025 05:32 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்தனர்.
அப்போது, சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், இவரது பெற்றோர்கள் உடல் பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, சிறுமியின் நலன் கருதி கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.