/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு விழாக்களில் பங்கேற்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
/
அரசு விழாக்களில் பங்கேற்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
அரசு விழாக்களில் பங்கேற்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
அரசு விழாக்களில் பங்கேற்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
ADDED : நவ 27, 2025 02:06 AM
ஈரோடு, அரசு விழாக்களில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலின், காளிங்கராயன் இல்லத்தில் ஓய்வெடுத்தார். நேற்று காலை, 10:35 மணிக்கு புறப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைத்தார். அங்கிருந்து ஓடாநிலை சென்று, தீரன் சின்னமலை மணிமண்பத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, புதிதாக அமைக்கப்படும் சிலையை பார்வையிட்டார்.
பின்னர், ஈரோடு சோலார் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அங்கு, 91.09 கோடி ரூபாய் மதிப்பில், 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 235.73 கோடி ரூபாய் மதிப்பில், சோலார் பஸ் ஸ்டாண்ட் உட்பட, 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 1.84 லட்சம் பயனாளிகளுக்கு, 278.62 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
பின், கார் மூலம், காளிங்கராயன் இல்லத்தில் ஓய்வெடுத்துவிட்டு, மாலையில் சித்தோடு ஆவின் வளாகத்தில் ஆவினை ஏற்படுத்திய எஸ்.கே.பரமசிவம் சிலையை திறந்து வைத்துவிட்டு, சித்தோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கோவைக்கு சென்றார்.
விழாக்களில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், நேரு, வேலு, கயல்விழி, மதிவேந்தன், எம்.பி.,க்கள் பிரகாஷ், செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார், கரூர் செந்தில் பாலாஜி, மேயர் நாகரத்தினம், ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் தோப்பு வெங்கடாசலம், வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாக்களுக்கு செல்லும் வழிகளில் திண்டல், அரச்சலுார், சோலார் உட்பட பல இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

