/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை
/
தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை
தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை
தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை
ADDED : நவ 27, 2025 02:06 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம், அரச்சலுார் அருகே ஓடாநிலையில் அமைந்திருக்கும், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வருகை புரிந்தார்.
மணிமண்டபத்தின் நுழைவு வாயிலில் இருந்த, தீரன் சின்னமலையின் முழு திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியைாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது உருவப்படத்திற்கு மலர்துாவி வணங்கினார். பின், தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்கள் முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக மணிமண்டபத்திற்கு வெளியே காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர், ஆரவாரத்துடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர்கள் முத்துசாமி, வேலு, நேரு, சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி.,க்கள் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ஈஸ்வரன், சந்திரகுமார், வெங்கடாசலம், கலெக்டர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

