/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாக்காளர் படிவம் ஒன்று மட்டுமே வழங்குறாங்க திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., முறையீடு
/
வாக்காளர் படிவம் ஒன்று மட்டுமே வழங்குறாங்க திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., முறையீடு
வாக்காளர் படிவம் ஒன்று மட்டுமே வழங்குறாங்க திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., முறையீடு
வாக்காளர் படிவம் ஒன்று மட்டுமே வழங்குறாங்க திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., முறையீடு
ADDED : நவ 11, 2025 04:02 AM
திண்டுக்கல்: வாக்காளர் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் நடக்கும் நிலையில் ஒரு வாக்காளருக்கு 2 படிவங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் அலுவலர்கள் ஒன்று மட்டுமே வழங்குவதாக திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., முறையிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 228 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கொடைக்கானல் வடகவுஞ்சியை சேர்ந்த பழங்குடியினர் வன உரிமை கிராம சபை தலைவர் ராசு தலைமையில் அளித்த மனுவில், சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. முழுமையாக இல்லாமல் ஒருசில இடங்களில் சரளை கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
முழுமையாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். கூட்டாற்றை கடந்து செல்ல கிலோ மீட்டர் துாரம் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளதால் கூட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் தனபாலன் கொடுத்த மனுவில், வாக்காளர் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் நடக்கும் நிலையில்ஒரு வாக்காளருக்கு 2 படிவங்கள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு படிவத்தை மட்டும் வழங்கிவிட்டு மற்றொரு படிவத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு தாங்களே வைத்துக்கொள்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

