/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரிமைத்தொகைக்காக முகாமில் காத்திருந்த பெண்கள்
/
உரிமைத்தொகைக்காக முகாமில் காத்திருந்த பெண்கள்
ADDED : ஜூலை 24, 2025 09:16 PM

கோவை; 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் திரளான பெண்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காத்திருந்து விண்ணப்பித்தனர்.
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் கடந்த, 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உட்பட, 13 துறைகளின் சார்பில், 43 சேவைகள் வழங்கப்படுகின்றன.
கோவையில் வார்டுகள் ரீதியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று மத்திய மண்டலம், 32வது வார்டு ஆர்.கே., திருமண மண்டபத்திலும், தெற்கு மண்டலம், 87 மற்றும், 88வது வார்டு ஆயிஷா மஹால் திருமண மண்டபத்திலும் நடந்தது.
முகாமில், பெரும்பாலானோர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பிக்க வந்திருந்தனர். தவிர, பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக இரு முகாம்களிலும், 1,000க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை உள்ளிட்டவை வழங்கினர்.