/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இறைவன் திருவடியை வணங்கினால் பாவம் தீரும்'
/
'இறைவன் திருவடியை வணங்கினால் பாவம் தீரும்'
ADDED : ஜூலை 24, 2025 09:19 PM

கோவை; 'இறைவன் திருவடியை வணங்கினால் பாவங்கள் போகும்' என்று திருச்சி கல்யாணராமன் கூறினார்.
கோவை ராம்நகர் அய்யப்பபூஜா சங்கத்தில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
பரதன் கைகேயி வாங்கிக்கொடுத்த அரச பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை; பரதனை அனைவரும் நிந்தித்தார்கள்.
ஆனால் குகன் மட்டும் புகழ்ந்தான். ஆயிரம் ராமன் இந்த பரதனுக்கு ஈடாகாது என்றான். ராமனுடைய திருவடியை வாங்கி பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்தார் பரதன்.
தசரதன் பட்டாபிஷேகத்தை தீர்மானித்தது ராமனுக்கு, ஆனால் கைகேயி தீர்மானித்தது பரதனுக்கு. பகவானான ராமன் தீர்மானித்தது பாதுகைக்கு. பரதனுக்கு வந்த கெட்ட பெயரும், பரதனை அனைவரும் நிந்தித்தது எல்லாமே ராமன் திருவடியை பூஜித்தவுடன் போய்விட்டது. பகவானை விட உயர்ந்தது அவன் திருநாமம் அவன் திருவடியுமே. இறைவனின் திருவடியை பிடித்தால் தான் நம்முடைய பாவங்கள் போகும்.
இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.