/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மையத்தடுப்பு விளம்பர பலகைகள் அகற்றம்
/
மையத்தடுப்பு விளம்பர பலகைகள் அகற்றம்
ADDED : ஜூலை 24, 2025 08:44 PM

கோவை; நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை, 100 அடி ரோட்டில் மையத்தடுப்பில் இருந்த விளம்பர பலகையை, மாநகராட்சி நேற்று அகற்றியது.
கோவை நகரில் உள்ள சாலை மையத்தடுப்புகள் மற்றும் சாலை சந்திப்புகள் நெடுஞ்சாலைத்துறை வசம் இருந்தால், அவற்றில் செடிகள் நட்டு, மேம்படுத்தும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது. சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு, சிறிய அளவில் நிறுவன பெயர் பலகை வைத்துக் கொள்ள அனுமதி தரப்படுகிறது.
அறக்கட்டளை சார்பில் அனுமதி பெறப்பட்டு, 12 இடங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகள் வைப்பதற்கான முயற்சி நடந்தது. 100 அடி ரோட்டில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மையத்தடுப்பில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் நேற்று அகற்றப்பட்டன.
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட் டதற்கு, ''அனுமதிக்கு மாறாக வைத்திருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. அபராதம் விதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.
''கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும். குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.