/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் தேடப்பட்ட சக ஓட்டல் தொழிலாளி கைது
/
கொலை வழக்கில் தேடப்பட்ட சக ஓட்டல் தொழிலாளி கைது
ADDED : ஜூலை 24, 2025 08:44 PM
கோவை; கோவையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட, சக ஓட்டல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோவை, உக்கடம், புல்லுக்காடு பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில், திண்டுக்கல், நத்தம் அருகேயுள்ள சிறுகுடியை சேர்ந்த நவீன்,40, திண்டுக்கல், ஆவராம்பட்டியை சேர்ந்த தயாநிதி,42, ஆகியோர் பணியாற்றி வந்தனர். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்றனர். அறையில் இருவரும் சேர்ந்து மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த தயாநிதி, காஸ் பர்னரால் நவீன்குமார் தலையில் அடித்ததில் உயிரிழந்தார். கரும்புக்கடை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய தயாநிதியை தேடி வந்தனர்.
திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த தயாநிதியை போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, ஓரின சேர்க்கைக்கு தயாநிதியை, நவீன் கட்டயாப்படுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு தயாநிதி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்து, நவீனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தயாநிதியை நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.