/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானத்தில் 20 குழிகள் தோண்டியதால் பரபரப்பு; ஆட்கள் கிடைக்காவிட்டால் இப்படியா செய்வது

ADDED : செப் 07, 2025 07:14 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மயானத்தில், 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், 13 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி மயானம் உள்ளது. மயான தொழிலாளர்கள் வாயிலாக சடலம் புதைத்தல், எரித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது. மயானத்துக்கு வரும் மக்கள் தரும் தொகையை கூலியாக பெற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் இறந்த பெண் ஒருவர் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்துக்கு சென்றுள்ளனர். அங்கு, 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு எதற்காக குழி தோண்டப்பட்டது என மயானத்தை பராமரிக்கும் பாபு என்பவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, குழி தோண்ட ஆட்கள் கிடைக்காததால், புதர் அகற்ற வந்த பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, குழிகள் மொத்தமாக தோண்டியதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி மயானத்தில், இருபதுக்கும் மேற்பட்ட குழிகளை முன்பாகவே தோண்டப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எதற்காக குழி தோண்டப்பட்டது என்பது குறித்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் குமரன், மயானத்துக்கு சென்று குழிகளை மூடுமாறு, மயான பாரமரிப்பாளரிடம் உத்தரவிட்டார். உடனடியாக குழி மூடப்பட்டது.
மேலும், இது போன்று செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.