/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பைக்கான கபடி 3 விதிகளை இணைக்க உத்தரவு
/
முதல்வர் கோப்பைக்கான கபடி 3 விதிகளை இணைக்க உத்தரவு
முதல்வர் கோப்பைக்கான கபடி 3 விதிகளை இணைக்க உத்தரவு
முதல்வர் கோப்பைக்கான கபடி 3 விதிகளை இணைக்க உத்தரவு
ADDED : செப் 07, 2025 07:24 AM
கோவை : முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டியில், எஸ்.ஜி.எப்.ஐ.,யின் மூன்று விதிமுறைகள் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது வீரர், வீராங்கனைகளை அடுத்தகட்டத்துக்கு தயார்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 12 வரை முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் இந்தாண்டு, 53 ஆயிரத்து, 576 பேர் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, பள்ளிகளில் இருந்து, 22 ஆயிரத்து, 314 பேர், கல்லுாரிகளில், 20 ஆயிரத்து, 915 பேர் பதிவு செய்துள்ளனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே கபடி போட்டி நடத்தப்படுகிறது. கபடி மீதான ஆர்வம் பிற மாவட்டங்களை காட்டிலும் கோவையில் அதிகமாக உள்ளது. அதிலும், இங்கே படித்து இங்கேயே வீரர்களாக உருவானவர்களே அதிகம். வீரர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5 கோடியில் கபடி, வாலிபால் உள்ளிட்டவற்றுக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கபடி வீரர், வீராங்கனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி அளிக்கும் விதமாக, கோவை நேரு ஸ்டேடியத்தில் எஸ்.டி.ஏ.டி., சார்பில் 'ஸ்டார் அகாடமி' இரு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. அதில், 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 'ஓபன்' போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமத்தால் (எஸ்.ஜி.எப்.ஐ.,) பின்பற்றப்படும் மூன்று விதிமுறைகளை இந்தாண்டு முதல் முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டியில் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
'ரெய்டு' பாடுவோருக்கு 30 நொடி, மூன்றாவது 'ரெய்டு' பாடுவோருக்கு 'டூ ஆர் டை', 'சூப்பர் டேக்கில்' ஆகிய மூன்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது வீரர்களிடம் திறமையை மேம்படுத்தவும், உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்கின்றனர் வீரர்கள்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசனிடம் கேட்டபோது,''எஸ்.ஜி.எப்.ஐ., விதிமுறைபடி இந்தாண்டு முதல் கபடி போட்டியில் மூன்று விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படியே வீரர்கள் விளையாட வேண்டும்,'' என்றார்.