/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் வாக்கரூவின் ரோபோடிக்ஸ் திட்டம் துவக்கம்
/
அரசு பள்ளியில் வாக்கரூவின் ரோபோடிக்ஸ் திட்டம் துவக்கம்
அரசு பள்ளியில் வாக்கரூவின் ரோபோடிக்ஸ் திட்டம் துவக்கம்
அரசு பள்ளியில் வாக்கரூவின் ரோபோடிக்ஸ் திட்டம் துவக்கம்
ADDED : ஆக 15, 2025 09:18 PM

கோவை; கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வாக்கரூ அறக்கட்டளை சார்பில், நவீன பல்நோக்கு கலையரங்கம் திறக்கப்பட்டு, ரோபோடிக்ஸ் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
வாக்கரூ நிறுவன மேலாண்மை இயக்குனர் நவுஷாத் கூறியதாவது:
வாக்கரூ அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுக்காக, கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நவீன பல்நோக்கு கலையரங்கம் மற்றும் 'வாக்கரூ ரோபோக்யூஸ்ட்' என்ற ரோபோடிக்ஸ் கல்வித்திட்டம் என, இரு திட்டங்களை துவக்கியுள்ளது. இத்திட்டம் மாணவர் களை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாணவர்கள், ரோபோட் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.
படைப்பாற்றல், சிந்தனை திறன் மற்றும் நவீன திறன்களை வளர்த்து க்கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா, முன்னாள் தலைவர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.