/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை டேபிள் டென்னிஸ் போட்டி பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
/
பல்கலை டேபிள் டென்னிஸ் போட்டி பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
பல்கலை டேபிள் டென்னிஸ் போட்டி பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
பல்கலை டேபிள் டென்னிஸ் போட்டி பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
ADDED : ஆக 15, 2025 09:16 PM
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. பெண்களுக்கான இப்போட்டியில், 21 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தன. லீக் போட்டிகளின் நிறைவில், பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லுாரி அணி, 3-0 என்ற புள்ளிகளுடன் முதல் பரிசை தட்டியது. 2-0 என்ற புள்ளிகளுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடம் பிடித்தது.
அதேபோல், 2-0 என்ற புள்ளிகளுடன் பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.