/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு: 3 பேரிடம் விசாரணை
/
ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு: 3 பேரிடம் விசாரணை
ADDED : ஆக 12, 2025 10:22 AM
கோவை: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு(எஸ்.ஐ.யூ.,) போலீசார் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காரமடை பகுதியில் உள்ள மூவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த, 23 முதல், 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிந்தது.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்களுக்கு வந்த செய்தியை 'பார்வர்டு' செய்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து மூவரையும் போலீசார் விடுவித்தனர்.