/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; பள்ளி தோறும் 10 ஆசிரியர்கள் பங்கேற்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; பள்ளி தோறும் 10 ஆசிரியர்கள் பங்கேற்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; பள்ளி தோறும் 10 ஆசிரியர்கள் பங்கேற்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; பள்ளி தோறும் 10 ஆசிரியர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 21, 2025 08:28 PM
பொள்ளாச்சி; முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், அரசு பள்ளி ஆசிரியர்களையும் பங்கேற்க செய்யும் வகையில், பதிவு மேற்கொள்ளப்பட்டு அதன் விபரம் எமிஸ் தளத்தில் குறிப்பிடப்படுகிறது.
நடப்பாண்டு, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் வாயிலாக பதிவுகள் நடக்கிறது. அதன்படி, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள், இன்று துவங்கி செப். 12ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியனாது, ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும், 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கும், 15 முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களும் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்கும் வகையில் பதிவு செய்து, எமிஸ் தளத்தில் விபரம் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள், பள்ளிகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டி அவசியமா என, கேள்வி எழுந்துள்ளது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாவட்ட அளவில், குழு மற்றும் தனி நபர் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அவ்வகையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10 ஆசிரியர்கள் வீதம், ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்க பதிவு செய்து, அந்த விபரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள், விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றால், காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி முடங்கி விடும். அரசின் உத்தரவால், செய்வதறியாது, பலரும் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.