/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகாவில் வென்ற பள்ளி மாணவர்கள்
/
யோகாவில் வென்ற பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 21, 2025 08:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், வி.எஸ்.டி. மார்சியல ஆர்ட்ஸ், ஐ.ஒய்.எஸ்.எப்.யுடன் இணைந்து, மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
இப்போட்டியில், 10 பள்ளிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பள்ளித் தாளாளர் மாரிமுத்து கலந்து கொண்டு, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர் பிரகாஷ், பயிற்சியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.