/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
15 கிலோ தக்காளி விலை ரூ.700; மேலும் உயருமென எதிர்பார்ப்பு
/
15 கிலோ தக்காளி விலை ரூ.700; மேலும் உயருமென எதிர்பார்ப்பு
15 கிலோ தக்காளி விலை ரூ.700; மேலும் உயருமென எதிர்பார்ப்பு
15 கிலோ தக்காளி விலை ரூ.700; மேலும் உயருமென எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2025 08:28 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், தென்னைக்கு அடுத்தபடியாக தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இம்மாதம் துவக்கத்தில், கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி (15 கிலோ பெட்டி) 500 ரூபாய் விலை கிடைத்தது. அதன்பின், தொடர்ந்து இரு வாரங்களாக 450 ரூபாய் விலை கிடைத்தது.
தொடர் மழை காரணமாக, விளைநிலத்தில் தக்காளி செடியின் பூக்கள் உதிர்தல், களை செடிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் தக்காளி வரத்து குறைந்தது.
கடந்த இரு நாட்களாக மழை பொழிவு இல்லாததால் தற்போது மார்க்கெட்டில் தக்காளி (15 கிலோ பெட்டி) 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சில விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தாலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு லாபம் இல்லை. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயருமென எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.