/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டைடல் பார்க்கிற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
டைடல் பார்க்கிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 07, 2025 06:35 AM
கோவை : சமீபகாலமாக கோவை விமான நிலையம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினமும், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கோவை சிட்ரா பகுதியில் உள்ள டைடல் பார்க்கிற்கு நேற்று முன்தினம் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கு சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு மோப்பநாய் உதவியுடன் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிந்தது. மர்மநபர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுப்பவர்கள் யாரென தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.