/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடைக்கால ஜீவனாம்சம் கேட்கலாமா?
/
இடைக்கால ஜீவனாம்சம் கேட்கலாமா?
ADDED : செப் 07, 2025 06:35 AM

கணவன் - மனைவி இருவரும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?
ஹிந்து திருமண சட்டம் பிரிவு-24-ன் படி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, கணவனிடம் இடைக்கால ஜீவனாம்சம் கோர முடியும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்.
வாடகை ஒப்பந்த காலம் முடிந்த பின்பும், வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டை காலி செய்து தர மறுத்தால், சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டும்?
சொத்துரிமை மாற்றச்சட்டம் சட்டப்பிரிவு-105-ன் படி, வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது வீடோ அல்லது கடையோ வாடகைக்கு கொடுக்கும்போது, வீட்டின் உரிமையாளரிடம் இருந்து சொத்தின் சுவாதீனம் வாடகைதாரருக்கு கைமாறுகிறது. வாடகைதாரர் வாடகை ஒப்பந்தம் முடிந்தபின்பும் காலி செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும்.
- வக்கீல் ஆர்.சண்முகம், ரேஸ்கோர்ஸ்.