/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி வாலிபால் போட்டி பைனலுக்கு செல்வது யார்?
/
பள்ளி வாலிபால் போட்டி பைனலுக்கு செல்வது யார்?
ADDED : ஆக 13, 2025 02:43 AM

சென்னை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், இறுதிப்போட்டிக்கு செல்லும் அணிகள் எவை என்பதை முடிவு செய்யும், அரை இறுதிப்போட்டிகள் இன்று நடக்க உள்ளன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி இணைந்து, ஏழாவது சென்னை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியை நடத்துகின்றன.
போட்டிகள், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடக்கின்றன.
இதில் மாணவர்களில் 27 அணிகளும், மாணவியரில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த மாணவருக்கான காலிறுதி போட்டியில், முதலில் விளையாடிய பெரம்பூர் டான்பாஸ்கோ அணி, 25 - 20, 25 - 18 என்ற நேர் செட் கணக்கில் பி.கே.ஆர்., பழனிசாமி அணியையும், செயின்ட் பீட்டர்ஸ் அணி, 33 - 35, 25 - 10, 25 - 10 என்ற செட் கணக்கில் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., அணியையும் தோற்கடித்தன.
அடுத்து நடந்த போட்டிகளில், செயின்ட் பீட்ஸ் அணி, 28 - 18, 26 - 28, 25 - 22 என்ற செட் கணக்கில், ஆலந்துார் மான்போர்ட் அணியையும், முகப்பேர் வேலம்மாள் அணி, 25 - 14, 25 - 8 என்ற நேர் செட் கணக்கில், அம்பத்துார் சேது பாஸ்கராவையும் தோற்கடித்தன.
இன்று நடக்க உள்ள அரையிறுதி போட்டியில் டான்பாஸ்கோ - செயின்ட் பீட்டர்ஸ் அணியையும், முகப்பேர் வேலம்மாள் - செயின்ட் பீட்ஸ் அணியும் எதிர்கொள்கின்றன.