/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்சிக்காரர் சம்பாதிக்க மக்கள் வாழ்வை பணயம் வைப்பதா? அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
/
கட்சிக்காரர் சம்பாதிக்க மக்கள் வாழ்வை பணயம் வைப்பதா? அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
கட்சிக்காரர் சம்பாதிக்க மக்கள் வாழ்வை பணயம் வைப்பதா? அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
கட்சிக்காரர் சம்பாதிக்க மக்கள் வாழ்வை பணயம் வைப்பதா? அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
ADDED : ஆக 13, 2025 02:31 AM
சென்னை: 'தன் கட்சிக்காரர்கள் சம்பாதிக்க, மக்கள் நல்வாழ்வை பணயம் வைக்கும் அலட்சிய போக்கை, முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
துாத் துக்குடி அருகே பொட்டலுாரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை அகற்ற வேண் டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் 456வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டம், பொட்டலுாரணி கிராமத்தில் அமைந்துள்ள மூன்று மீன் கழிவு ஆலைகளால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அந்த பகுதியில் மண் வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, மக்கள் உடல்நல குறைவாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆலைகளை மூடக் கோரி, பல முறை கோரிக்கை விடுத்தும், தி.மு.க., அரசு கண்டுகொள்ளாததால், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், மக்கள், இளைஞர்கள் மீதே, தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதையடுத்து, 2024 மே முதல், 456 நாளாக, சுற்றுச்சூழல் மாசுபட காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி, பொட்டலுாரணி மக்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், தி.மு.க., அரசோ, அமைச்சர்களோ, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி உட்பட யாரும் இந்த மக்களை கண்டுகொள்ளவில்லை. காலம் காலமாக மக்கள் இடையே பாகுபாடு பார்க்கும் தி.மு.க.,வின் செயல்பாடு கண்டனத்திற்கு உரியது.
தன் கட்சிக்காரர்கள் சம்பாதிக்க, மக்கள் நல்வாழ்வை பணயம் வைக்கும் அலட்சிய போக்கை, முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபட காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை உடனே மூட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.