/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணல் அள்ள ஒப்பந்தம் தருவதாக ரூ.10 கோடி மோசடி: இருவர் கைது
/
மணல் அள்ள ஒப்பந்தம் தருவதாக ரூ.10 கோடி மோசடி: இருவர் கைது
மணல் அள்ள ஒப்பந்தம் தருவதாக ரூ.10 கோடி மோசடி: இருவர் கைது
மணல் அள்ள ஒப்பந்தம் தருவதாக ரூ.10 கோடி மோசடி: இருவர் கைது
ADDED : ஆக 13, 2025 12:17 AM

சென்னை : மணல் அள்ள ஒப்பந்தம் பெற்று தருவதாக கூறி, 10 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில், கம்பம் வேளி வினரி பி.லிட்., என்ற நிறுவனம் நடத்தி வருபவர் ரகு, 70. இவருக்கு, 'பியூச்சரிஸ்டிக் குளோபல் ரிசோர்சஸ் பி.லிட்., நிறுவன இயக்குநர் களான ராஜகுரு, சதீஷ் ரத்தினம் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் அறிமுகமாகினர்.
தமிழகம் முழுதும் மணல் அள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளோம்; 'சப் - கான்டிராக்ட்' தருகிறோம் எனக்கூறி, பல்வேறு தவணைகளில் ரகுவிடமிருந்து, 10 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர்.
ஆனால், 'சப் - கான்டிராக்ட் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட, 'பியூச்சரிஸ்டிக் குளோபல்' நிறுவன இயக்குனர்களான தேனாம் பேட்டையைச் சேர்ந்த ராஜகுரு, 36, தி.நகரைச் சேர்ந்த சதீஷ் ரத்தினம், 28, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.