/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கிரிக்கெட்டில் திருவள்ளூரை வீழ்த்தி செங்கை அணி 'சாம்பியன்'
/
மாநில கிரிக்கெட்டில் திருவள்ளூரை வீழ்த்தி செங்கை அணி 'சாம்பியன்'
மாநில கிரிக்கெட்டில் திருவள்ளூரை வீழ்த்தி செங்கை அணி 'சாம்பியன்'
மாநில கிரிக்கெட்டில் திருவள்ளூரை வீழ்த்தி செங்கை அணி 'சாம்பியன்'
ADDED : செப் 04, 2025 08:42 AM

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், மாவட்டங்களுக்கு இடையிலான மாநில கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு மாவட்ட அணி, திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தி, 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மாவட்டங்களுக்கு இடையிலான, 'யு - -25' போட்டி, நேற்றுமுன்தினம் திருநெல்வேலியில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த செங்கல்பட்டு அணி, 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி, 8 விக்கெட் இழப்புக்கு, 286 ரன்களை அடித்தது.
அணியின் வீரர் மோகித் ஹரிகரன், 115 பந்துகளில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 125 ரன்களை அடித்தார். அடுத்து பேட்டிங் செய்த திருவள்ளூர் அணி, 44.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 203 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதனால், 83 ரன்கள் வித்தியாசத்தில் செங்கல்பட்டு மாவட்ட அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.