/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 04, 2025 08:43 AM
சென்னை: பிரின்ஸ் கல்லுாரியில் நடக்க உள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி.எம்., செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டி, கவுரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில், இம்மாதம் 14ம் தேதி நடக்க உள்ளது.
இதில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக, 'சுவிஸ்' முறையில், 'பிடே' விதிப்படி போட்டிகள் நடக்கவுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 20 கோப்பைகள், 10 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. 8 வயது பிரிவில் பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப் படுகிறது.
பங்கேற்க விரும்புவோர், வரும் 10ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 88382 29938 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.