/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் 'சாம்பியன்'
/
எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : செப் 04, 2025 08:41 AM

சென்னை: கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில கூடைப்பந்து போட்டியில், சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லுாரி அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.
கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில கூடைப்பந்து போட்டி, சிவகாசியில் உள்ள ஸ்ரீகாளீஸ்வரி கல்லுாரியில் நடந்தது. இதில், சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா, எஸ்.ஆர்.எம்., பல்கலை, செயின்ட் ஜோசப், கோவை பி.எஸ்.ஜி., உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
அரையிறுதி ஆட்டத்தில், எம்.ஓ.பி., அணி, 81 - 57 என்ற புள்ளி கணக்கில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணியை தோற்கடித்தது. இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., அணி, 76 - 52 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., கல்லுாரியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மூன்றாம் இடத்தை எஸ்.ஆர்.எம்., கல்லுாரியும், நான்காம் இடத்தை செயின்ட் ஜோசப் கல்லுாரி அணியும் கைப்பற்றின.