/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் மெட்ராஸ் இந்தியன்ஸ் வெற்றி
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் மெட்ராஸ் இந்தியன்ஸ் வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் மெட்ராஸ் இந்தியன்ஸ் வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் மெட்ராஸ் இந்தியன்ஸ் வெற்றி
ADDED : செப் 04, 2025 08:40 AM
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமான டி.என்.சி.ஏ.,வின் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், மெட்ராஸ் இந்தியன்ஸ் அணி, எழும்பூர் எக்செல்சியர்ஸ் அணியை தோற்கடித்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், சென்னையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில், மேடவாக்கத்தில் உள்ள சுமங்கலி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், மெட்ராஸ் இந்தியன்ஸ் அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 175 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த எழும்பூர் எக்செல்சியர்ஸ் அணி, 28.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 69 ரன்களில் சுருண்டது.
அதே இடத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், மெட்ராஸ் இம்மானுவேல் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் திருவல்லிக்கேணி காஸ்மோபாலிட்டன் அணியை தோற்கடித்தது.
வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில் நடந்த போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., அணி, 36.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 108 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய நுங்கம்பாக்கம் அணி, 36.5 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 112 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.