/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
'நாடோடிகள்' பட பாணியில் அரியலுாரில் காதல் திருமணம்
/
'நாடோடிகள்' பட பாணியில் அரியலுாரில் காதல் திருமணம்
'நாடோடிகள்' பட பாணியில் அரியலுாரில் காதல் திருமணம்
'நாடோடிகள்' பட பாணியில் அரியலுாரில் காதல் திருமணம்
ADDED : ஆக 11, 2025 02:23 AM
அரியலுார்:- அரியலூர் அருகே, நாடோடிகள் பட பாணியில், காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி, திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலுார் மாவட்டம், செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் அனுசியா, 23; சென்னை, கிளாம்பாக்கம் தனியார் மருத்துவமனை நர்ஸ். இவருக்கு, சிங்கப்பூரில் பணிபுரிந்த புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடியை சேர்ந்த குமரேசன், 27, 'இன்ஸ்டாகிராம்' மூலம் அறிமுகமானார்.
சில நாட்களுக்கு முன், சிங்கப்பூரில் இருந்து ஊர் திரும்பிய குமரேசன், அனுசியாவை நேரில் சந்தித்து பேசி, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இருவரின் பெற்றோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அனுசியாவின் பெற்றோர், அரியலுார் மாவட்டம், சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் மகளை தங்க வைத்தனர். அனுசியா தகவலில், நாடோடிகள் பட பாணியில், குமரேசன் நண்பர்களுடன் காரில், சின்ன பட்டக்காடு கிராமத்துக்கு சென்று, அனுசியாவை கத்தி முனையில் கடத்தி சென்றார்.
ஐஸ்வர்யா இதை தடுத்த போது, அவரது மகள் மித்ரா, 2, என்பவருக்கு காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவரது புகாரில், கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், காரில் தப்பிய காதல் ஜோடி, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு, நேற்று முன்தினம் மாலை தஞ்சமடைந்தனர்.
இரு வீட்டாரையும் அழைத்து பேசிய போலீசார், சமாதானம் செய்து வைத்து, அனுசியாவை, குமரேசனுடன் அனுப்பினர்.
அனுசியாவை காரில் கடத்திய சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பரப்பியது குறிப்பிடத்தக்கது.