/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு
/
குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு
ADDED : ஆக 17, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலுார்:அரியலுார் மாவட்டம், நெய்வனம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 38. குவைத்தில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து விட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு செந்துறை - ஆர்.எஸ்.மாத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடந்த போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரயில்வே போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.