/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
அரசு பஸ் மீது பைக் மோதல் போலீஸ்காரர் பலி
/
அரசு பஸ் மீது பைக் மோதல் போலீஸ்காரர் பலி
ADDED : ஆக 06, 2025 11:13 PM

அரியலுார்:அரியலுார் மாவட்டம், கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 30. மீன்சுருட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் காரராக பணியாற்றினார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், அதிலிருந்து விடுபடுவதற்கு சிகிச்சை பெறுவதற்காக, கடந்த 21 முதல், வரும் 9ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் இருந்தார்.
ஆனால், சிகிச்சைக்கு செல்லாமல் இருந்த இவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு ஆண்டிமடம் டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார்.
ஜெயங்கொண்டம்,- ஆண்டிமடம் மாநில நெடுஞ்சாலை ஓரமாக நின்றவர், திடீரென பைக்கை சாலையின் குறுக்கே ஓட்டிச் சென்று மையத்தடுப்பில் மோதினார். பின், ஆண்டி மடத்தில் இருந்து அணிகுறிச்சான் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியதில் சதீஷ் இறந்தார்.