ADDED : ஆக 19, 2025 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வின்ஸ்டன்-சலேம்: அமெரிக்காவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீரர் போபண்ணா, மொனாக்கோவின் ரொமைன் அர்னியடோ ஜோடி, இத்தாலியின் லுாசியானோ, பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர் ஜோடியை சந்தித்தது.
43 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் போபண்ணா ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 645 வது இடத்திலுள்ள இந்தியாவின் தக்சினேஷ்வர், உலகின் 74 வது இடத்திலுள்ள, அர்ஜென்டினாவின் மரியானோ நவோனை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தக்சினேஷ்வர் 6-3, 6-3 என நேர் செட்டில் தோல்வியடைந்தார்.