ADDED : ஆக 18, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வின்ஸ்டன்-சலேம்: அமெரிக்காவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று நடந்தது. இதன் இரண்டாவது போட்டியில், உலகத் தரவரிசையில் 663வது இடத்திலுள்ள இந்தியாவின் தக்சினேஷ்வர், உலகின் 103வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர்-3' வீரர், சிலியின் அலெக்சாண்ட்ரோ டாபிலோவை சந்தித்தார்.
முதல் செட்டை 1-6 என இழந்த தக்சினேஷ்வர், அடுத்த செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்று 7-6 என வசப்படுத்தினார். 3வது, கடைசி செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார்.
இரண்டு மணி நேரம், 4 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் தக்சினேஷ்வர், 1-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் அரங்கில் இது, தக்சினேஷ்வரின் சிறந்த வெற்றியானது.