/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்'
/
ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்'
UPDATED : ஆக 20, 2025 03:43 PM
ADDED : ஆக 19, 2025 10:15 PM

சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் ஸ்வியாடெக் (உலகின் 'நம்பர்-3'), இத்தாலியின் பாவோலினி ('நம்பர்-7' மோதினர்.
முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார் ஸ்வியாடெக். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஸ்வியாடெக், 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன் முறையாக கோப்பை கைப்பற்றினார்.
சின்னர் விலகல்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1', இத்தாலியின் சின்னர், 'நம்பர்-2', ஸ்பெயினின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட சின்னர், போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, கோப்பை வென்றார்.