/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஸ்வியாடெக் ஜோடி முன்னேற்றம்: யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு
/
ஸ்வியாடெக் ஜோடி முன்னேற்றம்: யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு
ஸ்வியாடெக் ஜோடி முன்னேற்றம்: யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு
ஸ்வியாடெக் ஜோடி முன்னேற்றம்: யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு
ADDED : ஆக 20, 2025 10:01 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதிக்கு ஸ்வியாடெக் (போலந்து), காஸ்பர் ரூட் (நார்வே) ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இம்முறை கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் புதிய முறையில் நடக்கிறது. ஒரு செட்டை கைப்பற்ற, 4 'கேம்' வென்றால் போதும்.
இதன் காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி, இத்தாலியின் லோரென்சோ முசெட்டி ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ஸ்வியாடெக், ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் ஜோடி 4-1, 4-1 என, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, டேனியல் மெத்வெடேவ் ஜோடியை வீழ்த்தியது.
'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 4-1, 5-4 என்ற கணக்கில் செக்குடியரசின் கரோலினா முசோவா, ரஷ்யாவின் ஆன்ட்ரி ருப்லெவ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் டேனியல் கோலின்ஸ், கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி 4-1, 5-4 என சகநாட்டை சேர்ந்த டெய்லர் டவுன்சென்ட், பென் ஷெல்டன் ஜோடியை தோற்கடித்தது.