/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
இத்தாலி ஜோடி சாம்பியன்: யு.எஸ்., ஓபன் கலப்பு இரட்டையரில்
/
இத்தாலி ஜோடி சாம்பியன்: யு.எஸ்., ஓபன் கலப்பு இரட்டையரில்
இத்தாலி ஜோடி சாம்பியன்: யு.எஸ்., ஓபன் கலப்பு இரட்டையரில்
இத்தாலி ஜோடி சாம்பியன்: யு.எஸ்., ஓபன் கலப்பு இரட்டையரில்
ADDED : ஆக 21, 2025 10:19 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி கோப்பை வென்றது.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இத்தாலி ஜோடி 6-3 எனக் கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி, 2வது செட்டை 7-5 என போராடி தன்வசப்படுத்தியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' அசத்திய இத்தாலி ஜோடி 10-6 என வென்றது. ஒரு மணி நேரம், 32 நிமிடம் நீடித்த போட்டியில் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 6-3, 5-7, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இது, இந்த ஜோடி கைப்பற்றிய 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தது. இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.