/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கேரளாவில் மெஸ்ஸி 'மேஜிக்' * நட்பு போட்டியில் பங்கேற்க வருகிறார்
/
கேரளாவில் மெஸ்ஸி 'மேஜிக்' * நட்பு போட்டியில் பங்கேற்க வருகிறார்
கேரளாவில் மெஸ்ஸி 'மேஜிக்' * நட்பு போட்டியில் பங்கேற்க வருகிறார்
கேரளாவில் மெஸ்ஸி 'மேஜிக்' * நட்பு போட்டியில் பங்கேற்க வருகிறார்
ADDED : ஆக 23, 2025 10:41 PM

கொச்சி: கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி விரைவில் கேரளா வருகிறார்.
கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா அணி, பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில்(கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நவம்பர் மாதம் இந்தியா வர இருப்பதாக அர்ஜென்டினா கால்பந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்தியில், 'அர்ஜென்டினா அணி, 2025ல் இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி அமெரிக்காவில் (அக்., 6-14ல்) நடக்கும். இரண்டாவது போட்டி நவ.,10 - 18ல் கேரளாவில் நடக்க உள்ளது. அர்ஜென்டினாவுடன் மோதவுள்ள எதிரணி பற்றி முடிவாகவில்லை,' என தெரிவித்துள்ளது.
கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில்,''அர்ஜென்டினா அணி, கேரளாவில் நடக்க வுள்ள நட்பு போட்டியில் பங்கேற்கிறது,'' என்றார்.
இப்போட்டி கொச்சியில் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
இரண்டாவது முறை
அர்ஜென்டினா அணி 2011ல், கோல்கட்டா வந்தது. சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நட்பு போட்டியில் (எதிர், வெனிசுலா) விளையாடியது. இப்போது இரண்டாவது முறையாக வர உள்ளது.