/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
வடகிழக்கு அணிக்கு கோப்பை: துாரந்த் கால்பந்தில் ஆதிக்கம்
/
வடகிழக்கு அணிக்கு கோப்பை: துாரந்த் கால்பந்தில் ஆதிக்கம்
வடகிழக்கு அணிக்கு கோப்பை: துாரந்த் கால்பந்தில் ஆதிக்கம்
வடகிழக்கு அணிக்கு கோப்பை: துாரந்த் கால்பந்தில் ஆதிக்கம்
ADDED : ஆக 23, 2025 10:08 PM

கோல்கட்டா: துாரந்த் கோப்பையை வடகிழக்கு யுனைடெட் அணி மீண்டும் வென்றது.
இந்தியாவில், துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசன் நடந்தது. கோல்கட்டாவில் நடந்த பைனலில் வடகிழக்கு யுனைடெட், டைமண்ட் ஹார்பர் அணிகள் மோதின. ஆஷீர் (30வது நிமிடம்), பார்த்திப் (45+1வது) கைகொடுக்க, முதல் பாதி முடிவில் வடகிழக்கு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின் வடகிழக்கு அணிக்கு தோய் சிங், 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் டைமண்ட் ஹார்பர் அணிக்கு லுாகா மஜ்சென் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். வடகிழக்கு அணிக்கு ஜெய்ரோ சாம்பெரியோ (81வது), ரோட்ரிக்ஸ் கெய்டன் (85வது), அஜராய் (90+3வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2024, 2025) துாரந்த் கோப்பை வென்றது. கோப்பையுடன், ரூ. 1.21 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த டைமண்ட் ஹார்பர் அணி, ரூ. 60 லட்சம் பரிசாக பெற்றது.
இத்தொடரின் சிறந்த வீரர், அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் பால்', 'கோல்டன் பூட்' விருதுகளை வடகிழக்கு அணியின் அஜராய் வென்றார்.