/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மேற்கு டில்லி அணி சாம்பியன்: நிதிஷ் ராணா அரைசதம் விளாசல்
/
மேற்கு டில்லி அணி சாம்பியன்: நிதிஷ் ராணா அரைசதம் விளாசல்
மேற்கு டில்லி அணி சாம்பியன்: நிதிஷ் ராணா அரைசதம் விளாசல்
மேற்கு டில்லி அணி சாம்பியன்: நிதிஷ் ராணா அரைசதம் விளாசல்
ADDED : செப் 01, 2025 10:50 PM

புதுடில்லி: டில்லி பிரிமியர் லீக் தொடரில் நிதிஷ் ராணாவின் மேற்கு டில்லி அணி சாம்பியன் ஆனது. பைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய டில்லி அணியை வீழ்த்தியது.
டில்லி பிரிமியர் லீக் 2வது சீசன் நடந்தது. இதன் பைனலில் மேற்கு, மத்திய டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மேற்கு டில்லி அணி கேப்டன் நிதிஷ் ராணா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மத்திய டில்லி அணிக்கு யுகல் சைனி (65), பிரான்ஷு விஜய்ரன் (50) கைகொடுக்க, 20 ஓவரில் 173/7 ரன் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மேற்கு டில்லி அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா, 49 பந்தில் 79* ரன் (7 சிக்சர், 4 பவுண்டரி) விளாசினார். மேற்கு டில்லி அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்து வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது. ரித்திக் ஷோகீன் (42*) அவுட்டாகாமல் இருந்தார்.