/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி ரன் குவிப்பு: அஜிதேஷ் சதம் விளாசல்
/
தமிழக அணி ரன் குவிப்பு: அஜிதேஷ் சதம் விளாசல்
ADDED : செப் 01, 2025 10:54 PM

சென்னை: புச்சி பாபு அரையிறுதியில் தமிழக அணியின் அஜிதேஷ் சதம் விளாசினார்.
சென்னையில், தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் டி.என்.சி.ஏ., 'லெவன்', ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் டி.என்.சி.ஏ., 'லெவன்' அணி முதல் இன்னிங்சில் 265/3 ரன் எடுத்திருந்தது. சித்தார்த் (20), இந்திரஜித் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் (22) நிலைக்கவில்லை. ஆன்ட்ரி சித்தார்த் (57) அரைசதம் கடந்தார். பின் இணைந்த அஜிதேஷ், அம்ப்ரிஷ் ஜோடி நம்பிக்கை தந்தது. அஜிதேஷ் சதம் விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது அஜிதேஷ் (101) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய அம்ப்ரிஷ், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.ஆட்டநேர முடிவில் டி.என்.சி.ஏ., 'லெவன்' அணி முதல் இன்னிங்சில் 503/7 ரன் எடுத்திருந்தது. அம்ப்ரிஷ் (62), வித்யுத் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐதராபாத் முன்னிலை
மற்றொரு அரையிறுதியின் முதல் இன்னிங்சில் ஐதராபாத் 225, ஹரியானா 208 ரன் எடுத்தன. ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 2வது இன்னிங்சில் 49/1 ரன் எடுத்து, 66 ரன் முன்னிலையில் இருந்தது.