/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'உலகை' வென்றால் ரூ. 40 கோடி: பெண்கள் ஒருநாள் போட்டியில்...
/
'உலகை' வென்றால் ரூ. 40 கோடி: பெண்கள் ஒருநாள் போட்டியில்...
'உலகை' வென்றால் ரூ. 40 கோடி: பெண்கள் ஒருநாள் போட்டியில்...
'உலகை' வென்றால் ரூ. 40 கோடி: பெண்கள் ஒருநாள் போட்டியில்...
ADDED : செப் 01, 2025 11:04 PM

துபாய்: பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) வெல்லும் அணிக்கு ரூ. 40 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் (செப். 30 - நவ. 2) நடக்கவுள்ளது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் லீக் சுற்றில் விளையாடும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். பைனல், நவ. 2ல் நடக்கவுள்ளது.
இத்தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. மொத்த பரிசுத் தொகை, கடந்த சீசனை (2022) விட 297 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 122.5 கோடியாக வழங்கப்படுகிறது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 40 கோடி வழங்கப்படும். இது, கடந்த சீசனை விட ரூ. 11.65 கோடி அதிகம்.
2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இது, கடந்த சீசனை விட 273 சதவீதம் அதிகம். அரையிறுதியோடு திரும்பும் இரு அணிகளுக்கு தலா ரூ. 9.89 கோடி கிடைக்கும். புள்ளிப்பட்டியலில் 5, 6வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 62 லட்சமும், கடைசி இரு இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 22 லட்சமும் வழங்கப்படும். லீக் சுற்றில், ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.29 லட்சம் பரிசாக கிடைக்கும்.