/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் சிந்து * உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்
/
இரண்டாவது சுற்றில் சிந்து * உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்
இரண்டாவது சுற்றில் சிந்து * உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்
இரண்டாவது சுற்றில் சிந்து * உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்
ADDED : ஆக 26, 2025 11:03 PM

பாரிஸ்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சிந்து.
பிரான்சின் பாரிசில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து மட்டும் பங்கேற்கிறார். உலக சாம்பியன்ஷிப்பில் இதுவரை ஐந்து பதக்கம் (2019ல் தங்கம், 2017, 2018ல் வெள்ளி, 2013, 2014ல் வெண்கலம்) வென்றுள்ளார்.
இம்முறை சாதித்தால், இத்தொடரில் ஆறு பதக்கம் சென்ற உலகின் முதல் வீராங்கனை ஆகலாம் என்ற நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில், ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன், பல்கேரியாவின் கலோயனாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 7-12, 17-19 என பின்தங்கினார் சிந்து. பின் எழுச்சி பெற்ற இவர், தொடர்ந்து 3 'கேம்களை' எடுத்து, முதல் செட்டை 23-21 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை 21-5 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் சிந்து 23-21, 21-5 என வென்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
பிரனாய் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், பின்லாந்தின் ஜோவாகிம்மை சந்தித்தார். இதில் பிரனாய் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரெத்தினசபாபதி, அம்சகருனன் ஜோடி 15-21, 5-21 என சீன தைபேவின் லியு, யங் ஜோடியிடம் தோற்றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ருதுபர்ணா-ஸ்வேதாபர்ணா சகோதரிகள் ஜோடி, ஷ்ருதி-பிரியா ஜோடி முதல் சுற்றில் தோற்றன.