/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சாத்விக்-சிராக் ஏமாற்றம்
/
பாட்மின்டன்: சாத்விக்-சிராக் ஏமாற்றம்
ADDED : டிச 20, 2025 10:06 PM

ஹாங்சு: வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி தோல்வியடைந்தது.
சீனாவின் ஹாங்சு நகரில், வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில், உலகின் 'டாப்-8' ஜோடிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. இதில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது.
அரையிறுதியில் சாத்விக், சிராக் ஜோடி, சீனாவின் வெய் கெங் லியாங், சாங் வாங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-10 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 17-21 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இந்திய ஜோடி 13-21 எனக் கோட்டைவிட்டது.
முடிவில் சாத்விக், சிராக் ஜோடி 21-10, 17-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

