sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...

/

அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...

அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...

அரையிறுதியில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...


ADDED : டிச 19, 2025 11:20 PM

Google News

ADDED : டிச 19, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாங்சு: வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியது.

சீனாவின் ஹாங்சு நகரில், பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் உலகின் 'டாப்-8' ஜோடி, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.

உலகத் தரவரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'பி' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றது.

மூன்றாவது, கடைசி போட்டியில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-2' ஆக உள்ள மலேசியாவின் ஆரோன் சியா, சோ இக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் குறைந்தது ஒரு செட்டை வென்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்திய ஜோடி முதல் செட்டை (17-21) என இழந்தது.

பின் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்டுகளை (21-18, 21-15) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 17-21, 21-18, 21-15 என வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்று, பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us