/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணம் தள்ளி போனதால் இளம்பெண் தற்கொலை
/
திருமணம் தள்ளி போனதால் இளம்பெண் தற்கொலை
ADDED : ஆக 12, 2025 09:31 PM
பாகூர்; கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 55; பாண்லே ஊழியர். இவருக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி லலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் உமாபாரதி 24; பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம் பர் மாதம், இவருக்கும், நரம்பை கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, நிச்சயிக்கப் பட்டது.
மணமகன் சிங்கப்பூரில் பணியாற்றி வருவதா ல், அவர் சொந்த ஊருக்கு வர காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், திருமணம் தடைபட்டு வந்ததால், உமாபாரதி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பனித்திட்டு கிராமத்தில் திருவிழாவையொட்டி, பாட்டு கச்சேரி நடந்தது. இதனை பார்ப்பதற்காக நடராஜனின் மகன் சென்று விட்டார். வீட்டிலிருந்த நடராஜன் ஒரு அறையிலும், உமாபாரதி மற்றொரு அறையிலும் துாங்கினர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் சுவாமி விதியுலா வந்தது. சாமி தரிசனம் செய்தவற்காக, பக்கத்து வீட்டுச் சேர்ந்த பெண், உமா பாரதியை எ ழுப்புவதற்காக சென்றார். உமாபாரதி துப்பட்டாவால் மின் விசிறியில் துாக்குப் போட்டு தொங்கி உள்ளார். அவரை மீட்டு, கிருமாம்பாக் கம் ஆறுபடை வீடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின்பேரில் கிருமாம் பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.