/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
/
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2025 09:31 PM

புதுச்சேரி; இந்திய கம்யூ., புதுச்சேரி நகரக்குழுவின் 5வது மாநாடு கொசக்கடை வீதியில் நடந்தது.
நிர்வாகிகள் சிவகுருநாதன், சுப்ரமணி, லதா ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டு கொடியை மாநிலக்குழு உறுப்பினர் அபிேஷகம் ஏற்றினார்.
மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஜீவானந்தம் அறிக்கை தாக்கல் செய்தார். நிர்வாகிகள் ஆனந்த், சசிக்குமார், இன்பமொழி, தனசீலன், ஜெயமூர்த்தி, முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் செயலாளராக ஜீவானந்தம், துணை செயலாளர்கள் சசிக்குமார், ஜீவானந்தம், கிளாமன்சோ, பொருளாளர் சிவகுருநாதன் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ரெஸ்டோ பார்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தல், உப்பனாரு மேம்பால பணியை விரைவாக முடிக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் மேம்பாலத்தை இழுவை படிகெட்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் நன்றி கூறினார்.