/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சி., அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
/
வ.உ.சி., அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
வ.உ.சி., அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
வ.உ.சி., அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
ADDED : அக் 01, 2025 12:02 AM

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்.எஸ்.எஸ்., சார்பில் வ.உ.சி. பள்ளியில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். துணை முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். தலைமையாசிரியர் ஸ்ரீதர் நோக்கவுரையாற்றினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் பேசுகை யில், கல்வி மூலம் தேச முன்னேற்றத்தில் இளைஞர் கள் வகிக்கும் பங்கு குறித்தும், மாணவர்கள் தங்கள் கனவுகளை அடைவதில் மாணவர்கள் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மாணவர் சிவகுமார் மாணவர்கள் தடைகளை மீறி முன்னேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி லி பேனியன் டி பெக் அலுமினியஸ் மூலம் பள்ளியில் கணினி ஆய்வகம் அமைப்பதற்கு உறுதியளித்தார்.
முன்னாள் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்பியல் துறை இணை பேராசிரியர் சந்தனலட்சுமி கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் 455 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பொறுப்பு ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.

