/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னை மாணவர் கொலை 13 ரெஸ்டோ பார்களுக்கு 'சீல்'
/
சென்னை மாணவர் கொலை 13 ரெஸ்டோ பார்களுக்கு 'சீல்'
ADDED : ஆக 12, 2025 03:56 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், விதிகளை மீறி நள்ளிரவில் இயங்கிய, 13 ரெஸ்டோ பார்களை கலால் அதிகாரிகள் பூட்டி, 'சீல்' வைத்தனர்.
புதுச்சேரி, ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில், ஆக., 9 நள்ளிரவில் நடந்த தகராறில், சென்னை கல்லுாரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து, கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவில், கலால் தனிப்படையினர், ஆக., 10ல் நகரில் உள்ள ரெஸ்டோ பார்களின் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பார் உட்பட 14 பார்கள், அனுமதி நேரத்தை கடந்து இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
கலால் தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர், 14 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இந்த பார்களில், கொலை நடந்த பாரை தவிர்த்த மற்ற, 13 பார்களுக்கு நேற்று சீல் வைத்தனர். கொலை நடந்த ஓ.ஜி.எம்., ரெஸ்டோ பார், போலீஸ் விசாரணைக்காக சீல் வைக்கப்படவில்லை.